search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை நாக்அவுட்"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோ 1270 நிமிங்கள் கோல் போட முடியாமல் தவித்துள்ளனர். #messi #Ronaldo #WorldCup2018
    கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கருதப்படுகிறார்கள். மெஸ்சி லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறது. ரொனால்டோ முதலில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும், தற்போது ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளார்கள். கிளப் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் சொந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. குறிப்பாக நாக்அவுட் சுற்றில் படுமோஷம்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-4 எனவும், போர்ச்சுக்கல் 1-2 எனவும் தோல்வியடைந்தது. ரொனால்டோ லீக் ஆட்டத்தில் நான்கு கோல்களும், மெஸ்சி ஒரு கோலும் அடித்தனர். நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.



    இதன்மூலம் உலகக்கோப்பை கால்பந்து நாக்அவுட் போட்டியில் இருவரும் 1270 நிமிடங்கள் விளையாடி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதில் மெஸ்சி முன்னணியில் உள்ளார். அவர் 756 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ரொனால்டோ 514 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ஜாம்பவான்கள் இந்த மோசமான சாதனைக்குள் சிக்கியுள்ளனர்.

    அடுத்த உலகக்கோப்பையில் இவர்கள் விளையாடுவார்களா? என்பது தெரியவில்லை. இதனால் மோசமான சாதனை அப்படி வைத்திவிட்டு செல்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.
    ×